நகர்ப்புற நக்சல்களை காங்கிரஸ் கட்சி முந்திவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், முற்போக்காளர்களை நகர்புற நக்சல்கள் என்று பிரதமர் அழைக்கிறார். இது அவருடைய பழக்கம். அவரது கட்சியே ஒரு பயங்கரவாதக் கட்சியாகும். பட்டியல் சாதிகள், குறிப்பாக பழங்குடியினர் மீது வன்கொடுமைகள் இழைக்கப்படுவதே உங்கள் ஆட்சியில்தான் என்றார்.