தூத்துக்குடியில் 5ஆம் புத்தகத் திருவிழா வருகின்ற அக். 03 13ஆம் தேதி வரை சங்கரப்பேரி திடலில் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான புகைப்படக் கண்காட்சி போட்டிக்கான இணைதளம் மற்றும் இலட்சையினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் பெ. ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் லி. மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா. ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் மாவட்ட வருவாய் அலுவலர் ச. அஜய் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.