திருச்செந்தூர் நகராட்சியில் பாதாளசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை தோப்பூர் பகுதியில் இருந்து அகற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் நேற்று(செப்.4) கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் துர்நாற்றம் வீசும், மக்கள் உயிரை காவுவாங்கும் பாதாளசாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை தோப்பூர் பகுதியில் இருந்து அகற்றிட வேண்டும். இல்லையென்றால் 09. 09. 2024 திங்கள்கிழமை திருச்செந்தூர் நகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தோப்பூர் ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.