பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் 4ஜி சேவையை இன்று தொடங்கிவைத்துள்ளது. சில ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் சார்பில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது. இதன் மூலம் மகர விளக்கு பூஜைக் காலத்தில் உதவியாக இருக்கும் எனவும் இந்த இணைய சேவைகளின் நிதியை வழங்குவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது.