தாமிரபரணி ஆற்றங்கரையில் மரங்கள் நடவேண்டும்: கோரிக்கை!

65பார்த்தது
தாமிரபரணி ஆற்றங்கரையில் மரங்கள் நடவேண்டும்: கோரிக்கை!
தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை சீர் செய்து மரம் நட்டு தரவேண்டும் என்று அமைச்சரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி பற்றி அதிகமான நூல் எழுதியவர். இவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு ஒன்றை நேரில் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது; தாமிரபரணியை சுத்தப்படுத்த தாங்கள் எடுத்த தமிழக அரசு நடவடிக்கைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்காக கடந்த மாதம் கலியாவூரில் இந்த பணியை மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமிபதி தலைமையில் நமது பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார். அந்த பணி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் அந்த இடம் மிகப்பெரிய இடம்.

மேலும், தாமிரபரணி பணி செய்வது பெரிய அளவில் மக்கள் மத்தியில் தெரிந்து பிரபலமாகாது. எனவே தயவு கூர்ந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து ஆழ்வார்திருநகரி பாலம் வரை இருகரையில் உள்ள முள்செடிகளையும், தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளையும் அமலைசெடிகளையும் அகற்றி, மரங்கள் நட வேண்டும். இதற்காக பலர் உதவ உள்ளனர் அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி