மதுரை - தூத்துக்குடி திட்டம் குறித்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் கொடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சு.வெங்கடேசன் எம்பி பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “செய்தியாளர் கேள்வி அமைச்சரின் காதில் சரியாக விழவில்லை என ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு துரோகமும், தமிழ்நாட்டின் செய்தியாளர்கள் மீது பழியும்” சுமத்தும் இரட்டை வழி அணுகுமுறையை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.