தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (40). கூலித் தொழிலாளி. இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு நேற்று பூப்புனித நீராட்டு விழா நடந்துள்ளது. விழாவுக்கு வந்த உறவினர் ஒருவர் தோசை கேட்டதால் பைக்கில் சாத்தான்குளம் சென்று வாங்கி வந்துள்ளார்.
வரும் வழியில் பைக் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியில் கணேசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.