குளுக்கோஸ் போட வந்த 6 மாத குழந்தை மரணம்

70பார்த்தது
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது தம்பியின் 6 மாத குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என அரசு மருத்துவமனைக்குக் கூட்டிவந்துள்ளார். அங்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், சிகிச்சை அளிக்கத் தெரியாமல் வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் குளுக்கோஸ் ஏற்ற நரம்பில் ஊசி குத்தி பயிற்சி எடுத்துக்கொண்டனர். கண்ட இடங்களில் எல்லாம் குத்தி அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி