விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

76பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே கடம்பா குளம் அமைந்துள்ளது. இது மிகப்பெரிய குளமாகும். இந்த குளத்தில் கடந்த ஆண்டு 36 கோடி ரூபாய்க்கு பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில், முறையாக பராமரிப்பு பணி நடைபெறாததால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்தில் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் அருகே உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கி வாழ்வாதாரம் இழந்தனர் இதன் காரணமாக தற்போது குளம் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளங்களிலிருந்து வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இதில் கடம்பா குளம் பகுதியில் ஐந்து ஆறு ஆகிய மதகுகள் அருகே உள்ள பகுதி மேடாக இருப்பதால் அந்தப் பகுதியில் வண்டல் மண் அள்ளி விவசாய நிலங்களை பண்படுத்த தெந்திருப்பேரை சுற்றுவட்டார கடம்பா குளம் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுப்பணி துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி சீட்டு புறப்பட்டு விவசாயிகள் வண்டல் மண் அள்ளி பயன்படுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தென் திருப்பேரை சுற்று வட்டார கடம்பா குளம் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று (செப்.,2) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி