பைக்கில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

74பார்த்தது
பைக்கில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடிய 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில் வசிப்பவர் பொன்ராஜ் இவரது மகன் பொன்மாண்டி (48) பால் வியாபாரியான இவர் தனது வீடு அருகே கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி இரவு யாரோ மர்ம ஆசாமிகள் இவரது கொட்டையில் இருந்த 1 ஆட்டை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூபாய் 20 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் பொன் பாண்டி புகார் செய்தார்.

புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த வேல்முருகன் மகன் மணிகண்டன் (49), மேல சண்முகபுரம் முதல் தெருவில் வசிக்கும் முருகேசன் மகன் மாரியப்பன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஆடு மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இவர்கள் 2பேரும் இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் ஆடுகளை திருடி, அவர்கள் வேலை பார்க்கும் இறைச்சி கடையில் விற்பனை செய்து விடுவது போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி