தூத்துக்குடி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து சார்பில் கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி
பஞ்சாயத்து தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மகளிர் குழுவினர் மனு அளித்தனர்.
மற்றொரு தரப்பினர் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதிக்கு பட்டா வழங்கிய பின்பு தான் மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
இதைத்தொடர்ந்து இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது..
இதைத் தொடர்ந்து மகளிர் குழு பெண்கள் பஞ்சாயத்து தலைவர் சரவணன் முற்றுகையிட்டு மாநகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்தை மாநகராட்சி உடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தாக இருந்ததால் எங்களுக்கு இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என மகளிர் குழு பெண்கள் குற்றம் சாட்டினர்.
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து மாநகராட்சியாக இணைத்தால் மட்டுமே குடிநீர், சாலை, தெருவிளக்கு, குப்பைகளை அள்ளுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்பதால் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பெண்கள் தெரிவித்தனர்.