இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு!

61பார்த்தது
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் மாநகர லட்சுமிபதி துவக்கி வைத்தார்


தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர் சுயேட்சிகள் என 28 பேர் போட்டியிடுகின்றனர் இதனால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது

இந்நிலையில் இன்று தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னனுவாக்குப்பதிவு இயந்திரங்களில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் படத்துடன் கூடிய சின்னங்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணியை மாவட்ட தேர்தல் நடத்து நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதி நேரில் சென்று தூவக்கி வைத்தார்


அதே போன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சீட்டு வரும் இயந்திரங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டு தயார் செய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்களுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி