எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி காலமானார்

74பார்த்தது
எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி காலமானார்
மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி இன்று(ஏப்ரல் 10) காலமானார். 'நாடு விட்டு நாடு', 'நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் முத்தம்மாள் பழனிசாமி, 1933-ல் மலேசியாவில் பிறந்தவர். இந்த நூலில் கோயம்புத்தூரில் இருந்து மலேயாவுக்கு சஞ்சிக்கூலியாக இடம்பெயர்ந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்தார். பின்னர் தமிழில் 'நாடு விட்டு நாடு' என்கிற புத்தகமாக எழுதினார். பெண் எழுத்தாளர்களில் புலம்பெயர் இலக்கியம் சார்ந்து எழுதியவர்கள் மிகக் குறைவு. இந்த துறையில் தனித்துவ எழுத்தாக இவரது நூல் அமைந்துள்ளது.