தானம் செய்யப்பட்ட காவலர் உடலுறுப்புகள்

77பார்த்தது
தானம் செய்யப்பட்ட காவலர் உடலுறுப்புகள்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அய்யம்பேட்டைச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் - தமயந்தி மகன் சதீஷ்குமார்(26). இவர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி தனது வீட்டில் உள்ள மரத்தில் ஏறியபோது தவறி விழுந்ததில் பின் தலையில் அடிபட்டுடுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்த நிலையில் இதயம் சென்னைக்கும், சிறுநீரகம், கண்கள் ஆகியவை சி.எம்.சி.மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.

தொடர்புடைய செய்தி