அதிமுக முன்னாள் நிர்வாகி தவெகவில் இணைகிறார்

63பார்த்தது
அதிமுக முன்னாள் நிர்வாகி தவெகவில் இணைகிறார்
அதிமுக முன்னாள் நிர்வாகியும் OPS ஆதரவாளருமான மருது அழகுராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக அவர் தனது X தளப் பக்கத்தில், "ஒரு தலைமையும் ஒரு தலைமுறையும் அரசியலுக்கு வருகிறது. அதுதான் 2026 ஆம் ஆண்டை தீர்மானிக்கப் போகிறது" என்று பதிவிட்டுள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த மருது அழகுராஜ், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது அம்மா'வின் முன்னாள் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி