இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் மேலும் வங்கிப் பணியில் அவுட்டோர் சிங் என்ற பெயரில் தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் பணி பாதுகாப்பை வழங்கிட வேண்டும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வங்கி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் சார்பில் வருகிற மார்ச் 24 மற்றும் 25ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் பீச் ரோட்டில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு தூத்துக்குடியில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்