பிரேசிலில், சக ஊழியரின் தண்ணீர் பாட்டிலில் விஷம் கலந்து, அவரை கொல்ல முயன்ற 38 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சக ஊழியருக்கு பணியிடத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக அப்பெண் விசாரணையின்போது கூறியுள்ளார். அந்த தண்ணீரை குடித்த சக ஊழியருக்கு, திடீரென வாயில் எரிச்சல் உணர்வு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அதன் பின்னர், இதற்கு காரணமான அப்பெண் கைது செய்யப்பட்டார்.