மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘பைசன் -காளமாடன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.