மனவளர்ச்சி இல்லாத இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை.

1045பார்த்தது
கயத்தாறு அருகே அய்யனார்ஊத்து கிராமத்தில மனவளர்ச்சி இல்லாத இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா அய்யனார்ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்தவர் கணபதி மகள் பேச்சியம்மாள் (25). மன வளர்ச்சி இல்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று திங்கள்கிழமை மதியம் வீட்டில் பூச்சி கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேச்சியம்மாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பேச்சியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேச்சியம்மாள் தந்தை கணபதி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். கயத்தாறு காவல் ஆய்வாளர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி