சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 10:30 மணிக்கு போடிநாயக்கனூருக்கு புறப்படும் விரைவு ரயில் (20601) அதிகாலை 3:54 மணிக்கே நாமக்கல்லில் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் போடிநாயக்கனூரில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விரைவு ரயில் (20602) நள்ளிரவு 1:34 மணிக்கு நாமக்கல்லில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.