ஒவ்வொரு நாடும் புத்தாண்டை வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடுகின்றனர். ஸ்பெயின் மக்கள் நள்ளிரவில் 12 திராட்சைகள் சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்கின்றனர். கிரேக்க மக்கள் தங்களுடைய வீட்டு வாசல்களில் வெங்காயத்தை கட்டி தொங்க விடுகின்றனர். டென்மார்க்கில் மக்கள் தங்கள் நண்பர்களின் வீட்டு வாசலில் தட்டுகளை போட்டு உடைக்கின்றனர். இந்தியாவில் மக்கள் வான வேடிக்கைகள் வெடித்தும், பூஜை அறைகளில் விளக்கேற்றியும் புத்தாண்டை வரவேற்கின்றனர்.