40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எளிதாக செரிக்கக் கூடிய, வேகவைத்த மீன்களை 2 துண்டுகள் அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். வயதான பின்பு உடல் உழைப்பு குறைந்து விடுவதாலும், இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படியும் பிரச்சனை இருப்பதாலும் அதிக கொழுப்பு மிக்க உணவுகளான மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த கோழி அல்லது கடல் உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.