மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்

76பார்த்தது
மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் குறித்து அதிகாரிகளுக்கு தெரியவரவே, நேரில் சென்று விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும், தற்போது அவருக்கு 18 வயது ஆகிவிட்டது எனவும் சிறுவனுக்கு 18 வயது நிரம்பவில்லை என தெரியவந்தது. இந்நிலையில் சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி