அதிகமாக பயணம் செய்பவர்கள், நீண்ட நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு முடி வறண்டு காணப்படும். இவர்கள் ஆளிவிதை ஹேர்பேக்கை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் ஆளிவிதைகளை தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதிலிருந்து ஜெல் வெளியேறத் தொடங்கும். இந்த ஜெல்லை தனியாக எடுத்து ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து தலைக்கு தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளித்தால் தலைமுடி சில்க்கியாகவும், ஸ்மூத்தாகவும் மாறிவிடும்.