நடிகர் அஜித் உயிர் பிழைக்க காரணம் இதுதான்!

567பார்த்தது
நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் படம் "விடாமுயற்சி". இந்த படத்தில் நடந்த விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் லைக்கா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தது. அதில் நடிகர் ஆரவ் உடன் கார் சேசிங் காட்சியில் அஜித் ஈடுபட்டிருந்தபோது கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் AirBag ஓபன் ஆகியதால் இருவரும் உயிர் தப்பினர். இந்த வீடியோ வைரலான நிலையில், கோவை மாநகர காவல்துறை அந்த வீடியோவை பதிவிட்டு Wear Seatbelt என குறிப்பிட்டு சரி என்ற குறியை குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி