அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்படுவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாடாளுமன்ற அனுமதி இன்றி எவ்வித சட்ட ஒப்புதலுமின்றி பிரதமர் இவ்வளவு பெரிய அளவில் எப்படி நிதி திரட்ட முடியும்? அரசியல் சட்ட கோட்பாடுகளுக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி ரகசியமாக செலவிடப்பட்டுள்ளது. இதற்கு பாஜக பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வரும் தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.