ஆசிரியை நிர்மலா வழக்கு 26ல் தீர்ப்பு!

72பார்த்தது
ஆசிரியை நிர்மலா வழக்கு 26ல் தீர்ப்பு!
சில ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரியில் பயிலும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுகுறித்த ஆடியோவில் அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அணைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி