அமைச்சர் நேருவை சந்தித்து விவசாயிகள் ஆதரவு

56பார்த்தது
அமைச்சர் நேருவை சந்தித்து விவசாயிகள் ஆதரவு
திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேருவை, விவசாய சங்கத்தினர் சந்தித்து ஆதரவு அளித்தனர். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில், நிர்வாகிகள் நேரில் சென்று பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். தங்களுடைய கோரிக்கைகளையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். இந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஐஜேகே கட்சியின் பாரி வேந்தர் எம்.பி., போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி