கோவையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

81பார்த்தது
கோவையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தங்களது தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று கோவை வஉசி பூங்கா, ரயில் நிலைய வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் சுமார் 5க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கே9 என்ற மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக அச்சமின்றி வாக்களிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது போன்ற சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி