திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை - துரைமுருகன்

85பார்த்தது
திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை - துரைமுருகன்
வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டதில் பங்கேற்றார்திமுக அமைச்சர் துரைமுருகன். அதில் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவை சுக்கு நூறாக உடைப்பேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு தலைவர் இப்படியா பேசுவது. திமுக என்ன பூச்சியா நசுக்கிவிட. திமுக என்பது நெருப்பாற்றில் பூத்தப் பூ. ஒரு போதும் அழிக்க முடியாது. திமுகவை அழிக்க இந்த நாட்டில் எந்த கொப்பனும் பிறக்கவில்லை. திமுகவை அழிப்பேன் என்று சொன்ன ராஜகோபாலச்சாரியார் மூட்டைப் பூச்சி போல் அழிந்துபோனார் எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி