குற்றவாளிக்கு மூணு ஆண்டு செய்கின்றனர்

59பார்த்தது
குற்றவாளிக்கு மூணு ஆண்டு செய்கின்றனர்
பேருந்திற்காக காத்திருந்த நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வழியில் 02 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10, 000 அபராதம்
கடந்த 2023 ஆண்டு காரைக்கால், கைலாசர் தெருவை சேர்ந்த பெரிய கருப்பன் மகன் செந்தில்குமார் என்பவர் பேருந்திற்காக காத்திருந்த போது அவ்வழியே வந்த எதிரி மேற்படி நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவட்டகுடி பகுதியில் வந்த போது புகார்தாரர் அணிந்திருந்த 02 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.
மேற்படி, நபர் அளித்த புகரை பெற்று வழக்குப்பதிவு செய்த பேரளம் காவல் துறையினர் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு CCTV பதிவுகளை ஆய்வு செய்து சம்பவத்தில் தொடர்புடைய எதிரி காரைக்கால், திருநள்ளார், அறங்கா நகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் மகேஷ் (வயது-24) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை நன்னிலம் குற்றவியல் நீத்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைக்கு பின் இன்று (10. 06. 2024) எதிரிக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய். 10, 000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

டேக்ஸ் :