காதலன் உமாபதியை கரம் பிடித்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா

84பார்த்தது
காதலன் உமாபதியை கரம் பிடித்த அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா
நடிகர் அர்ஜுன் மகளான நடிகை ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதிக்கும் இன்று (ஜுன் 10) காலை சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. மிக பிரமாண்டமாக நடந்த இந்த திருமண விழாவில், நடிகர்கள் விஷால், விஜயகுமார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி