திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மன்னார்குடி உட்கோட்டம், திருமாக்கோட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
பொதுமக்களை அச்சுறுத்தி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதமின்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.