சாலையோரத்தில் திடீா் பள்ளங்கள்

60பார்த்தது
சாலையோரத்தில் திடீா் பள்ளங்கள்
குடவாசல் அருகே சாலையோரங்களில் மண் உள்வாங்கியதால் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்-கும்பகோணம் நெடுஞ்சாலை ஓரத்தில் குடவாசல் பகுதியிலிருந்து மஞ்சக்குடி, சிமிழி, அரசவனங்காடு, காப்பணா மங்கலம், மணக்கால் அய்யம்பேட்டை வரை கடந்த 6 மாதங்களாக கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்தபிறகு மேற்பரப்பில் மண்ணை பரப்பி நிரப்பி விடப்பட்டிருந்தன. தற்போது பெய்து வரும் கோடை மழை காரணமாக சாலையோரங்களில் குழாய்கள் மூடப்பட்ட இடத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து மழையால் பள்ளம் அதிகரித்து வருவதால், சாலையும் பாதிக்கப்படும்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது: ராட்சச குழாய்களை பதித்த பின் அவசரத்தில் மேலோட்டமாக மண்ணை பரப்பி விட்டனா். இதனால், மழை பெய்து, மண் உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டு விட்டது. இந்த பள்ளம் உண்டான பிறகு எவ்வித எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதனால் சாலை ஓரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி