நன்னிலம் அடுத்த குடவாசல் அருகே திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் சார்பில் கரும்பு சாகுபடி குறித்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் சீதக்கமங்கலம் பகுதியில் நடைபெற்றது. கரும்பு சாகுபடிக்கு அரசு மற்றும் கரும்பு ஆலை சார்பில் வழங்கப்படும் மானியம் சாகுபடியின் போது தேவையான இயந்திர உதவிகள் விரைவாக கரும்புகளை வெட்டி ஆலைசா அனுப்புதல் மாற்றுப் பயிராக கரும்பை விவசாயிகள் பயிரிட வைப்பது குறித்தும் விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் கரும்பு ஆலை அதிகாரிகள் விளக்கம் அளித்ததுடன் எந்திரங்கள் மூலம் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.