மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு இன்று (டிச., 15) இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நுரையீரல் சார்ந்த பாதிப்புகளால் கடந்த ஒரு மாதமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. முகலிவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.