வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (டிச., 15) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை (டிச., 16) நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், காரைக்காலில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை மறுநாள் (டிச., 17) நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.