நன்னிலத்தில் வேளாண் பொறியியல் துறையால் மன உளைச்சலில் விவசாயி

57பார்த்தது
தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை மூலமாக விவசாயிகள் விவசாய பணிக்காக குறிப்பிட்ட மணி நேரத்திற்கு வாடகையாக முன் பணம் செலுத்தினால் அருகாமையில் உழவுக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவது நடைமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டம் மணக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்ற விவசாயி, திருவாரூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் விவசாய பணிக்காக டிராக்டரை முன்பதிவு செய்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் விதம் 12 மணி நேரத்திற்கு முன்பணமாக 6100 ரூபாய் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி அன்று பதிவு செய்த நிலையில் 09 ஆம் தேதி டிராக்டரை வேளாண் பொறியியல் துறை அனுப்பி உள்ளது. 10மணிக்கு வந்த டிராக்டர் ஒரு மணி நேரம் மட்டுமே பணி செய்த நிலையில் ஒரே இடத்தில் நின்று டிராக்டரின் டயர் மட்டும் சுற்றியது. பிறகு 12 மணி அளவில் திரும்ப டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஓட்டுனரை கேட்டதற்கு ஃபீல்டு (வயல்) சரியில்லை என கூறியுள்ளார்.
ஆனால் அதே ஃபீல்டில்(வயலில்) தனியாருக்கு சொந்தமான டிராக்டர் மூலம் விவசாய பணியை செந்தில் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் "தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையினரால் கடந்த 18 நாட்களாக விவசாய பணியை தொடர முடியாமல் மன உளைச்சலில் உள்ளதாகவும் வேளாண் பொறியியல் துறை மீது வழக்கு தொடர உள்ளதாகவும் விவசாயி செந்தில் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி