முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ்-கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், அதிமுகவினர் உடன் பேசாமல் இருந்தார். பழனிசாமி பெயரை உச்சரிப்பதை தவிர்த்தார். இந்நிலையில், நேற்று மும்மொழி கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், உலக தமிழ் மாநாடு தொடர்பான விவரங்களை தெரிவிக்க சிரமப்பட்டார். அப்போது அவருக்கு உடனடியாக சில தகவல்களை செங்கோட்டையன் வழங்கினார். செங்கோட்டையன் வழிக்கு வந்தது, பழனிசாமிக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.