நாகை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல்

50பார்த்தது
பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் அமைச்சவை கண்டித்து நாகை அடுத்த நாகூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும், அம்பேத்கர் குறித்து பேசிய பேச்சை அமித்ஷா திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் ஆய்வாளர் சிங்காரவேலன் தலைமையிலான போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா மீது புகார் அளிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சாலை மறியல் போராட்டத்தால் நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி