தமிழ்நாடு அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், தேயிலை விவசாயிகளுக்கு அக்டோபர் மாதத்திற்கான தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை தேயிலை வாரியத்திடம் முறையிட்டும் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்நிலையில், அக். மாத நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும். இல்லை என்றால் டிச. 22ஆம் தேதிக்கு பிறகு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.