திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையம் அருகே 15 குடும்பங்களைச் சேர்ந்த ஆதிய இனப் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் அரசின் பல்வேறு சலுகைகள் நலத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழல் உள்ளது. தங்களுக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்க கோரி கடந்த பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்கிரமித்த மன்னார்குடியைச் சேர்ந்த ஆதிய இனத்தவர்கள் கடந்த 9 நாட்களாக தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தனர். இந்நிலையில் இன்று பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியரிடம் மாணவர்களுடன் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.