தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.,10) காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கம் செய்யப்படவுள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.