மன்னையில் 40 கொள்ளுபேரன்களுடன் பிறந்தநாள்கொண்டாடிய முதியவர்

66பார்த்தது
மன்னார்குடியில் கொள்ளு பேரன் எள்ளு பேரன்களுடன் 100 வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ முதலியார் தெருவை சேர்ந்த விவசாயி
RN. சந்தானராஜகோபாலன், இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும், 5 பெண் பிள்ளைகளும்
உள்ளனர். 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி பிறந்த சந்தனா ராஜகோபாலனுக்கு இன்று 100 வது பிறந்தநாள் விழா அவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. இவரது 8 மகன் மற்றும் மகள்களின் பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என சந்தான ராஜகோபாலனின் 21 பேரப்பிள்ளைகள், 40 கொள்ளு பேரன் பேத்திகள், 1 எள்ளு பேரன் என தனது இரத்த உறவினர்களுடன் ஒன்றிணைந்து தன்னுடைய 100 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். விழாவிற்கு வந்தவர்கள் பெரியவர் சந்தனாராஜ கோபாலனுடன் ஆசி பெற்று சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி