மன்னார்குடியில் ஓசியில் மது தரவில்லை எனில் கடையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டும் நபரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபான கடைக்கு வந்த மது பிரியர் ஒருவர் தனக்கு இலவசமாக மது வேண்டும் என கடைக்காரரிடம் கேட்டுள்ளார். காசு கொடுக்காமல் மது தர முடியாது என கடைக்காரர் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஏற்கனவே மது குடித்து போதை தலைக்கேறிய நிலையில் நான் பிரபல நாளிதழ்களில் வெளிவந்து பிரபலமானவன், தனக்கு மதுபாட்டில்கள் தரவில்லை எனில் 1 லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து கடையை கொளுத்தி விடுவேன் எனவும் என்னை யார் என்று நினைத்தாய் சரக்கு தரவில்லை என்றால் உனக்கு வேலை இல்லாமல் செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். இதை அங்கிருந்த கடை ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ தற்போது பல்வேறு ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நபர் மன்னார்குடியில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையில் ஓசியில் மது கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிட தக்கது. இத்தகைய நபர்கள் மீது காவல்துறை கடுமையான கடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.