அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி இன்று (பிப்., 14) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு சந்தித்தார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தார். தொடர்ந்து பேசிய டிரம்ப், நாங்கள் இருவரும் சேர்ந்து இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வோம் என உறுதியளித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.