தேனி அருகே மதுராபுரி பகுதியில் உள்ள திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில், சேலம் மாவட்டத்தில் இருந்து சபரிமலை சென்ற பக்தர்களின் பேருந்து மீது எதிரே சபரிமலையில் இருந்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த வேன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பெண்கள் 15க்கும் மேற்பட்டோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.