மும்பையில் 2008ஆம் ஆண்டு தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. “பயங்கரவாத அச்சுறுத்தலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவுடன் இணைந்து எதிர்கொள்வோம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், இசுலாமியத் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 164 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 308 பேர் காயமடைந்தனர்.