தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது, தமிழகத்தை பட்டா போட்டு விற்று விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் சிவகாசியில் நேற்று மகளிர் தின கொண்டாட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சண்டை சச்சரவு இல்லாத, பிரச்சனை இல்லாத எம்ஜிஆர்-ஜெயலலிதா அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் மலரச் செய்ய வேண்டும். நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.