சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) மாற்றம் இன்றி விற்பனையாகிறது.
நேற்று ஒரு சவரன் ரூ.65,840-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் நீடிக்கிறது.
ஒரு கிராம் ரூ.8,230க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் மாற்றம் ஏதும் இன்றி ஒரு கிராம் ரூ.110-க்கும், 1 கிலோ ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 20ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.66,480-க்கு விற்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் ரூ.640 குறைந்தது.